உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை பார்வதி... அப்படி என்ன பிரச்சனை, ஓபன் டாக்...
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் பார்வதி திருவோத்து.
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரும் இவர் தமிழில் பூ, மரியான், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுவெளியில் தனது சமூக கருத்துக்களை வெளிப்படையாக பேசும் நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.
நடிகை பார்வதி அண்மையில் ஒரு பேட்டியில் தனக்கு இருக்கும் உடல்நலக் குறைவு குறித்து பேசியுள்ளார்.
எனக்கு கவனக்குறைவு மற்றும் அதிவேக செயல்பாடு குறைபாடு (ADHD) உள்ளது. ஆனால் அதை நான் பெரிய விஷயமாக கருதவில்லை, என்னைப் பொறுத்தவரை காலம் மற்றவர்களைப் போல எனக்கு செயல்படவில்லை.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இனி உழைப்பேன், நான் கடுமையாக உழைத்தேன். எனக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் எல்லாம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.






















