ஏதென்ஸில் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல்
சினிமா
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரது மகள் சவுந்தர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த புகைப்படங்களில், ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பிரபல இசை அமைப்பாளர் அனிருத்-காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் சமீபத்தில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்றார். திருமணம் முடிந்து குடும்பத்துடன் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த ரஜினிகாந்த் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னை திரும்பினார்.
இதனிடையே, ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அந்த புகைப்படங்களை அவரது இளைய மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஏதென்ஸ் நகரில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சவுந்தர்யா, "நாங்கள் ஏதென்ஸில் உருவாக்கிய அற்புதமான நினைவுகள்! இந்த அழகான குடும்ப விடுமுறையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் ரிலாக்ஸ்டான கேசுவல் உடையில், தனது பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் அழகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சவுந்தர்யாவின் இந்த பதிவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரபல நடிகை ராஷி கண்ணா இந்தப் புகைப்படங்களைப் பார்த்து வியந்து, "How cute!" என கமெண்ட் செய்துள்ளார்.






















