• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகும் கூடு - First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் விஷால்

சினிமா

அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில் உண்மைச் சம்பவத்தை தழுவி தயாராகும் புதிய தமிழ்த் திரைப்படமான "கூடு" படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான, குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் 'பனோரமா ஸ்டுடியோஸ்' நிறுவனம் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் தடம் பதிக்கிறது.

இவர்களுடன் இணைந்து 'ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட்' சார்பில் M. கணேஷ், மற்றும் 'கல்ட் டிஜிட்டல்' நிறுவனம் சார்பில் சூனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி ஆகியோர் இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்டரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஷால், "பெரிய மனதுடன் கூடிய ஒரு அழகான குட்டி கதை தான் இந்த கூடு. இந்த சிறப்பான பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி, 'கூடு' என்ற டைட்டில் மட்டும் மிகவும் வித்தியாசமான மற்றும் மர்மமான முறையில் வடிவமைக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உண்மைச் சம்பவப் பின்னணியைக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் நேரடியாக களம் இறங்குவதால் இந்த 'கூடு' திரைப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் தற்போதே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


 

Leave a Reply