• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க இறக்குமதிக்கான வரி விலக்கு காலம் நீட்டிப்பு - கனடா அரசு அறிவிப்பு

கனடா

Canada extends tariff relief on US to June 2028: அமெரிக்க இறக்குமதிக்கான வரி விலக்கு காலத்தை கனடா நீட்டித்துள்ளது.

2028 ம் ஆண்டு ஜூன் வரை அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரி விலக்கு காலத்தை கனடா அரசு நீட்டித்துள்ளது.

நாட்டின் விநியோக சங்கிலியை பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கொள்கை கட்டமைப்பை கனடா அரசு அறிமுகப்படுத்தியது.

மேலும் சில உள்நாட்டு பொருட்களுக்கான பொதுவான வரி விலக்குகளையும் அரசு திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் கனேடிய நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது தொடர்பாக கனடாவின் நிதியமைச்சர் பிரான்சுவா பிலிப் ஷாம்பெய்ன்(Francois-Philippe Champagne),  சுங்கவரி விலக்கு நடவடிக்கைகள் சீரமைக்கப்படுவதன் மூலம், எங்கள் நாட்டின் வணிகங்கள் போட்டி தன்மையுடன் நிலைத்திருக்கவும், கனடாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்கவும், நியாயமற்ற அமெரிக்க சுங்கவரிகளால் பாதிக்கப்படும் எங்களின் தொழில் நிறுவனங்களை பாதுகாக்கவும் நாங்கள் உதவுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய கொள்கை கட்டமைப்பானது, நாட்டின் பொதுக் கல்வி மற்றும் வளத் துறைகளுக்கான ஆதரவை விரிவுபடுத்துகிறது.

இவை, விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த கடமைகளை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு நிவாரணத்தையும், ஒழுங்கு முறைக்கான வெளிப்படைத்தன்மையையும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply