நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் - ஷ்ரத்தா கபூர்
சினிமா
பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். கடைசியாக இவர் ஸ்ட்ரீ-2 என்ற படத்தில் நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி ரசிகர்களுடன் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஸ்ரத்தா கபூர் உரையாற்றுவார்.
அந்தவகையில் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ஸ்ட்ரீ-2 வெற்றிக்கு பிறகு, அவர் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த நாட்கள் குறித்தும், ஏன் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அப்படத்திற்கு பிறகு தனக்கு பல்வேறு படவாய்ப்புகள் கிடைத்ததாகவும், ஆனால் கதைக்காக அவற்றை நிராகரித்தாகவும் தெரிவித்துள்ளார்.
“‘ஸ்ட்ரீ 2’ படத்திற்குப் பிறகு , அதிக சம்பளத்துடன் எனக்குப் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், சரியான கதை கிடைக்கும் வரை எதிலும் கையெழுத்திடக் கூடாது என்று நான் முடிவு செய்திருந்தேன். நான் பொறுமையாக இருக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது, நான் அப்படியேதான் செய்தேன்.
நிச்சயமாக, நீங்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திற்காக காத்திருப்பது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் காத்திருக்க முடிவு எடுத்ததற்காக நான் பெருமைபட்டுக் கொள்கிறேன். அதனால், எப்போதும் உங்கள் மனது சொல்வதையே கேளுங்கள் என நான் சொல்வேன். சில நேரங்களில் அது கடினமாக இருக்கலாம், ஆனால் அதற்காகக் காத்திருப்பது முற்றிலும் மதிப்புக்குரியது.” என தெரிவித்தார்.
நாட்டுப்புற நடனக் கலைஞர் விதாபாய் நாராயணகான்கரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஈதா படத்தில் ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இப்படம் டிச.4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





















