• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவுதி அரேபியா தாக்குதல்களின் பின்னால் இவர்கள் தான் - ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஏமன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதிகள், ஏமன் வளைகுடாவை செங்கடலுடன் இணைக்கும் குறுகிய வழித்தடமான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து எமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா போர் தொடுத்து வரும் சூழலில், சவுதியின் முக்கிய நகரங்கள் மீதும், விமான நிலையங்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டு, அதன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலையானது, ஒரு பேரலுக்கு 93.74 டாலர் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது ட்ரம்ப் மீது அமெரிக்க மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சவுதி அரேபியாவின் மீதான ஹவுதிகளின் தாக்குதலை தாம் மற்றக்கப் போவதில்லை என்றும், நவம்பர் 3 தேர்தல்களுக்கு பிறகு விளைவுகள் பயங்கரமாக இருக்கும் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஹவுதிகள் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். ஹவுதிகள் நீண்ட காலமாக அமைதியாக இருந்தனர், ஆனால் இப்போது மீண்டும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

கடற்படையோ, விமானப்படையோ இல்லாத உலகின் மிக மோசமான பொருளாதரத்தையும் 301 சதவீத பணவீக்கத்தையும் கொண்ட, ஒரு தோல்வியுற்ற நாடான ஈரான் அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

சவுதி அரேபியாவை மிகவும் மோசமான முறையில் தாக்கி, அமெரிக்க தேர்தல்களுக்கு முன்பாக எண்ணெய் விலைகளை வேண்டுமென்றே உயர்த்த ஹவுதிகள் முயற்சி செய்து வருகின்றனர். இது நல்லதல்ல. சவுதி அரேபியாவின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார். 

Leave a Reply