• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் 8 முக்கிய ஐ.டி நிறுவனங்களுக்கு PERM தடை - இந்தியர்களுக்கு பேரிடி

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறையில், மைக்ரோசாப்ட், அடோப், காக்னிசன்ட், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் கேப்ஜெமினி உள்ளிட்ட எட்டு முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் தொடர்பாக அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சார்பில் புதிதாகச் சமர்ப்பிக்கப்படும் PERM விண்ணப்பங்களை ஏற்கவோ, ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைச் செயல்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு பெறுவதற்கு PERM எனப்படும் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் நடைமுறை முக்கியமானதாகும்.

இதன் மூலம், குறிப்பிட்ட பணிக்கு தகுதியான அமெரிக்கத் தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லை என்பதையும், வெளிநாட்டுத் தொழிலாளரைப் பணியமர்த்துவதால் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் பாதிக்கப்படாது என்பதையும் நிறுவனம் நிரூபிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையால், குறித்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் நிரந்தரக் குடியுரிமை விண்ணப்பங்கள் தாமதமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தத் தடை காரணமாக ஏற்கெனவே வழங்கப்பட்ட கிரீன் கார்டுகள் தானாகவே ரத்தாகாது. அதேபோல், எச்-1பி விசாக்களும் தானாக இரத்துச் செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply