• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரேனிகுண்டா 2 படத்தின் 2ஆம் பாடலை வெளியிட்ட அனிருத் 

சினிமா

ஆர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ல் வெளியான திரைப்படம் 'ரேணிகுண்டா'

ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் .

சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பித்து ஆந்திராவை அடையும் ஐந்து இளைஞர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்று கிளாசிக் அந்தஸ்து பெற்றது.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இயக்குநர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் கடந்த 2017 வெளியான ‘கருப்பன்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது ரேணிகுண்டா' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'ரேணிகுண்டா 2' உருவாகி வருகிறது. பன்னீர்செல்வம் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குவது மட்டுமல்லாமல், தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ்செல்வம், சுந்தீப், வேல ராமமூர்த்தி, ஹரிஷ் பாரதி, சுஜாதா, சுரபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை தீப்ஷிகா அறிமுகமாகி உள்ளார்.

மனு ரவிச்சந்திரன் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார், ராஜசேகர் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர்

கடந்த ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘ரேனிகுண்டா 2’ படத்திலிருந்து ஏற்கனவே விஞர் யுகபாரதி எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய ‘ஏகாவலி’ என்ற பாடல் வெளியாகியது.

இந்த நிலையில், “ரேனிகுண்டா 2” படத்தின் ‘மச்சகல்லி’ இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குருஅய்யாதுரை, கவிதா கோபி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
 

Leave a Reply