விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா...
சினிமா
சூர்யா இந்த வருடம் செம கம்பேக் கொடுத்து தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். அதிலும் கருப்பு உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. அதை தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செம க்ளாஸ் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
இந்நிலையில் சூர்யா அடுத்து மலையாள இயக்குனர் ஜீது மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
அதோடு இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது, மேலும் கேரளாவில் இப்படத்தை ரூ. 10 கோடிக்கு கோகுலம் சினிமாஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் சூர்யா, விஜய்யின் மார்க்கெட்டை எட்டி பிடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.





















