சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்
சினிமா
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் படம் மண்டாடி.
படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியின் அடிப்படையிலும் மண்டாடி திரைக்கதை அமைந்துள்ளது.
ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனத்தை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனும் பாராட்டியுள்ளார். படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்.,
“மண்டாடி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு உண்மையான பலன் கிடைத்துள்ளது.
நல்ல கதை எப்போதும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! இந்த மாபெரும் வெற்றிக்கு என் அன்பு அண்ணனுக்கும், ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.






















