• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமானங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழித்தடங்களில் திடீர் மாற்றம் 

இலங்கை

அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள எரிமலை மீண்டும் செயல்பட தொடங்கியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றிரவு (07) இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் பறக்கும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான பல விமானங்களும் மாற்றப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள அனக் கிரகடாவ் எரிமலை மீண்டும் செயல்பட தொடங்கியதன் காரணமாக, ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களில் விமானச்சேவைகளை நிறுத்திவைக்க இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் சிலிக்கா கலந்த பாறைத்துண்டுகள் வானத்தின் பரந்த பகுதியில் பரவுவதால், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலைமையைக்கருத்தில் கொண்டு, இலங்கைக்கு கீழே, எரிமலைக்கு மேற்கே உள்ள பரந்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு இந்தோனேசிய விமான போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Leave a Reply