• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறையிலிருந்து நாமல் எழுதிய அவசர கடிதம்..! தீவிர ஆலோசனையில் அதிகாரிகள் 

இலங்கை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிற்கு கடிதமொன்றினை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடிதம் இன்று (7) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு சட்டரீதியான தடை ஏதுமில்லை என சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

நாடாளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (08) முதல் 11ஆம் திகதி வரை கூடவிருக்கின்றது.

எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply