• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு - 11 பேர் மாயம் 

இலங்கை

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சௌடெல் சூறாவளியால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் ஜியாங்சியின் சூச்சுவான் மாவட்டத்திலுள்ள காபிங் நகரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply