பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி துடு
இலங்கை
தெமட்டகொட, வேலுவான வீதிக்கு அருகில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த ஐந்து சந்தேக நபர்கள், மூன்று வாள்களுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொலன்னாவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.























