நேபாளத்தில் நடந்த சோகம் - சிட்னி வாழ் யாழ். குடும்பம் தொடர்பில் தகவல் இல்லை
நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கை தொடர்ந்து மனதை உலுக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா (42) மற்றும் அவர்களின் இரண்டு மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வர் தான் தற்போது காணாமல் போயுள்ளவர்கள். இவர்கள் நேபாளத்திற்கு பயணம் செய்திருந்த நிலையில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கியிருக்கலாம் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. உயிரிழப்பு என உறுதிப்படுத்தப்படவில்லை.
குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் விரைவில் பத்திரமாக கிடைக்க பிரார்த்திப்போம்.





















