அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் - உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்
அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது.
அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம்.
விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது.





















