• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இம்ரான் கான் தொடர்பில் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் உள்ள இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, இம்ரான் கானை வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதுடன், அவரது உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை வழங்க வைத்தியர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சையின்போது இம்ரான் கானின் சகோதரி மற்றும் தனிப்பட்ட வைத்தியர் ஆகியோர் உடனிருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த விசாரணை வரை அல்லது வைத்தியர்கள் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறத் தகுதியானவர் எனத் தெரிவிக்கும் வரை இம்ரான் கான் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Reply