• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா

சினிமா

திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் முன்னாள் கதாநாயகிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமந்தாவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓடிடிதளமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து சமந்தா கூறியதாவது:-

நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. அதனால் தான் சம்மதித்தேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தவறுகள் செய்வதையும் ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்துவதையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

மேலும் பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை இந்நிகழ்ச்சியில் காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a Reply