• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்பைடர்-மேன் - டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா ஜோடியின் ரகசிய திருமணம்

சினிமா

ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் வேளையில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களான டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா ஜோடி தங்களது ரகசியத் திருமணக் கொண்டாட்டத்தை இங்கிலாந்தில் நடத்தியுள்ளனர்.

இச்செய்தி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியான இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. படம் திரைக்கு வந்த 7 நாட்களில் ரூ.11,750 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இமாலய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இத்திரைப்படம், இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா ஜோடி தங்களது நீண்ட நாள் காதலைத் திருமண பந்தமாக மாற்றியுள்ளனர்.

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள ஆடம்பரமான பீவர்புரூக் ஹோட்டல் தோட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.4 கோடி செலவில் 3 நாட்கள் இந்தத் திருமணக் கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளன.

திரைப்பிரபலங்கள் பலரும் ராபர்ட் டவுனி ஜூனியர், திமோதி சாலமேட், கைலி ஜென்னர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 250 பேர் மட்டுமே இதில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மணமகனின் தோழனாக டாம் ஹாலண்டின் தம்பி சாம் உடனிருந்தார்.

தகவல்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததால், திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் செல்போன்களைப் பயன்படுத்தக் கடும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், இவர்களது திருமண மேடை மற்றும் அலங்காரங்கள் 'ஸ்பைடர்-மேன்' கருப்பொருளைக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாம்ஹாலண்டும், ஜெண்டாயாவும் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் இணைந்து பணியாற்றிய போது முதன் முதலில் சந்தித்தனர்.

2021-ல் இருவருக்கும் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. ஆனாலும் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் தனிப்பட்ட ரகசியமாகவே வைத்திருந்தனர்.
 

Leave a Reply