• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்

இலங்கை

மட்டக்களப்பு  களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் புழுக்களுடனும்,  பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுக்கள் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனினால் இன்று கைப்பற்றப்பட்டன. 

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் பிஸ்கட்டை உற்பத்தி செய்தவர்,  விநியோகம் செய்தவர்,  விற்பனை செய்தவர்,  ஆகியோருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதில் உற்பத்தியாளருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டன

46000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் இத்தொகுதி இலக்கத்தையுடைய அனைத்து பிஸ்கட் பைக்கற்றுக்களையும் விநியோகம் செய்த அனைத்து கடைகளிலிருந்தும் உடன் மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றால் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன் தெரிவித்தார்.
 

Leave a Reply