கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு
தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 24 வயதான வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் மற்றும் அவசர வைத்திய குழுவினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது






















