• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது

இலங்கை

கொழும்பு மத்திய பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிக்கு அண்மையில், ரூ. 270 இலட்சம் பணத்தை வாகனமொன்றில் எடுத்துச் சென்ற இரு சந்தேகநபர்கள், அவர்கள் பயணித்த வேன் வாகனத்துடன் கைது செய்யப்பட்டு, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது தொடர்பாக உறுதியான தகவல்களை அவர்கள் வழங்கத் தவறியுள்ளனர்.

இதனால், இந்தப் பணம் திட்டமிடப்பட்ட குற்றச்செயல், போதைப்பொருள் கடத்தல், ஆயுத வர்த்தகம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டதா என்பது குறித்து, கொழும்பு மத்திய பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. மஹேஷ் குமாரசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன குமார உள்ளிட்ட குழுவினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 59 மற்றும் 54 வயதுடையவர்கள். அவர்கள் சங்கமித்தா மாவத்தை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 2026.07.22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply