• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆகஸ்டில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ்... 

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட வெளியீடு தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 

Leave a Reply