பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி
இலங்கை
பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ரயில் தண்டவாளத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.
அருகிலுள்ள வீடுகள் மற்றும் வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது.இத்தாக்குதலுக்குத் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.
குவெட்டா கண்டோன்மென்ட்டிலிருந்து ரயிலில் பயணித்த பாகிஸ்தான் இராணுவத்தினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்த விபத்தால், ரயில் தடம் புரண்டதுடன் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.





















