• Welcome to TamilsGuide
செய்திகள் 1

3 நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் 

சினிமா

சூர்யா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கருப்பு திரைப்படம் கடந்த மே 14ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக வெளிவரவில்லை. இதன்பின் மே 15ஆம் தேதி அனைத்து தடைகளையும் தாண்டி வெளியானது.

கருப்பு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் ஷோ அன்று இப்படத்தின் வெற்றியை திரையரங்கில் ஆர்.ஜே. பாலாஜி கொண்டாடிய வீடியோ கூட இணையத்தில் வைரலானது.

இப்படியொரு வெற்றியைத்தான் சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும் கருப்பு திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் கருப்பு வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.
 

Leave a Reply