அமெரிக்க - ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் ட்ரம்ப் வௌியிட்ட தகவல்
ஈரானுடனான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஆரம்பமாவதற்கான வாய்ப்புள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக நியூயோர்க் போஸ்ட் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
அடுத்த 36 முதல் 72 மணிநேரத்திற்குள் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ட்ரம்பிடமும் வினவப்பட்டுள்ளது, அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒரு குறுஞ்செய்தி மூலம், அது சாத்தியமே எனப் பதிலளித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை உருவாக்குவதற்கு ஈரான் அரசாங்கத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில், இன்றுடன் முடிவடையவிருந்த போர் நிறுத்தத்தை நீடிப்பதாக ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.























