மீனவ நண்பன்...
சினிமா
1977 ஆக 14 ல் வெளிவந்த புரட்சித் தலைவரின் கடைசி பிளாக்பஸ்டர் படம்தான் "மீனவ நண்பன்" ஸ்ரீதரின் "உரிமைக்குரலி"ன் இமாலய வெற்றிக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வந்த படம்தான் "மீனவ நண்பன்". படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை. "தங்கத்தில் முகமெடுத்து", மற்றும் "பொங்கும் கடலோசை" பாடல்கள் எவர்கிரீன் வரிசையில் சேர்ந்து கொண்டது. கண்ணழகு சிங்காரிக்கு எதுகையும் மோனையுமாய் வாலி வரிகளை வாணியும் பாட "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்" பட்டத்து ராஜாவும் பட்டாளச்சிப்பாயும்"போன்ற பாடல்களால் அன்றைய அரசியல் களதிலும்,சினிமா தளத்திலும் ஒருசேர சிகஸரும், போருமாய் தலைவர் எதிரிகளை விளாசிய விதம் மலைக்க வைத்தது. ஒரு படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் அதிகபட்சமாக பதினாறு லட்சங்கள் சடையப்ப செட்டியாரிடம் இந்தப்படத்திற்குதான் வாங்கினார். எதிர் முகாமில் சிலர் தலைவரின் வெற்றியை மிகவும் வேண்டாத வயத்தெரிச்சலோடு ரசிப்பவர்கள் போலும்.. அதனால்தான் "மீனவ நண்பன்" "உரிமைக்குரல்" அளவு நிறைய அரங்குகளில் 100 நாட்கள் ஓடவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.உலகம் சுற்றும் வாலிபன் ,உரிமைக்குரல் படத்தின் வெற்றி ஒலி அவர்கள் காதுகளில் சவ்வை கிழித்த விதம் அப்படி.."உரிமைக்குரலை"
காட்டிலும் அதிக தியோடர்களில் ஓடாவிட்டாலும் முதல் ரவுண்டிலேயே 1 கோடியை தாண்டி வசூல் செய்த படம் மீனவ நண்பன்..
சென்னையில் "உரிமைக்குரலை" காட்டிலும் மிக அதிக வசூலை பெற்ற படம். சென்னையில் ஓடி முடிய 319 நாளில் ரூ 1776719.00 வசூலாக பெற்று அதுவரை வெளிவந்த எதிரணியின் அனைத்து படங்களை காட்டிலும் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது ஆனால் "தீபம்" 342 நாட்கள் ஓட்டி 1668722.85 வசூலாக காட்டினார்கள். தில்லு முல்லு செய்து பொய்வசூல் காட்டிய "தங்கப்பதக்கம்", "அண்ணன் ஒரு கோயில்" படங்களின் வசூலை தவிர்த்து பார்த்தால் அவர்களுக்கு இது புரியும்.
"தீபத்தி"ன் வசூலை முறியடித்து வெற்றி கொண்ட "மீனவ நண்பனி"ல் வரும் பாடலில் தலைவர் பாடுவார் 'நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்' என்று.
ஆனால் அவர் இருக்கும் வரை யாருக்கும் அந்த துணிவு வரவில்லை. அவர்கள் தீபம் அணைந்ததே தவிர மீனவ நண்பன் திரை இருந்த வரை நிலைத்தான். சென்னையில் "உரிமைக்குரல்" 368 நாளில் பெற்ற வசூல் ரூ1195691.32. ஸ்ரீதர் தயாரிப்பில் அய்யன் நடித்த அனைத்து படங்களின் கந்தல் வசூலை காலில் போட்டு மிதித்த படம்தான் "மீனவ நண்பன்".
சென்னை, மதுரை, சேலம் 100 நாட்களும், இலங்கையில் இரண்டு திரையரங்குகளை சேர்த்தால் மொத்தம் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பெற்ற படம். அடுத்து ஸ்ரீதர் இயக்கத்தில் வரவிருந்த "அண்ணா நீ என் தெய்வம்" படப்பிடிப்பு
முடிவதற்குள் முதல்வர் நாற்காலியில் தலைவர் அமர்ந்ததால் "மீனவ நண்பனே" ஸ்ரீதர் இயக்கத்தில் கடைசி படமாக அமைந்தது எனலாம்.
இதில் சில கைஸ்கள் "உரிமைக்குரல்" அய்யன் நடிக்க வேண்டிய படமாம். இதேபோல் "உத்தமபுத்திரனை" தலைவர் நடித்திருக்க வேண்டிய படத்தில் புகுந்து சொதப்பி படத்தை தோல்வி படமாக்கியதை கண்டும் கைஸ்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. "உத்தம புத்திரனி"ல் தலைவர் நடித்திருந்தால் அதன் தயாரிப்பில் புதுமை காட்டி ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தயாரித்து
வெற்றி பெற்றிருப்பார். வேண்டாமப்பா! புரட்சி நடிகரின் இயல்பான நடிப்பிற்கு முன்னால் என்ன கைதட்டி டான்ஸ் ஆடினாலும் மோகினி ஆட்டம் எடுபடாது என்பது திண்ணம்.
நன்றி....அன்று ஒருநாள் நடிகப் பேரரசர் பதிவிலிருந்து.....






















