வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன போர் விமானம் - மிரளவிடும் ஈரான்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை, அமெரிக்காவுக்கு சொந்தமான அதிநவீன F-35 போர் விமானத்தை ஒன்றைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வேறு தகவல்களை அந்த படையினர் வழங்கவில்லை.
எனினும், ஈரானுக்கு மேல் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, குறித்த வானூர்தியை அவசரமாகத் தரையிறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் பேச்சாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது ஈரானின் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.






















