• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி 

இலங்கை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் இடம்பெற்று இருந்த நிலையில் , பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வியாபாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியினை ஓடி வந்தவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் குறித்த வண்டியின் சாரதியிடம் மருத்துவ சான்றிதழ் இன்மையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சினிமா பாடல்களை ஒலி எழுப்பி செல்வதனால் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதனால் , வெதுப்பக வண்டிகளுக்கென்று பிரத்தியேகமான ஒலியினை வழங்கிய போதிலும் , அதனை மீறியதனால் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
 

Leave a Reply