உலகம் காணாத பலத்துடன் தாக்குவோம் - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானின் உத்தேசத் தாக்குதல் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான், முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று மிகக் கடுமையான இராணுவத் தாக்குதலை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது நடத்தப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் பின்னணியில், ஏற்கனவே நடந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கவே இந்த நடவடிக்கை அமையவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுச் கூறியதாவது,
"ஈரான் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது.
ஒருவேளை அவர்கள் தாக்குதலை முன்னெடுத்தால், இதுவரை உலகம் கண்டிராத ஒரு மாபெரும் பலத்துடன் நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம்.
" மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே டுபாய், அபுதாபி மற்றும் பஹ்ரைன் பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அமெரிக்கா ஏற்கனவே உறுதியளித்துள்ளது.






















