• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராமர்- சீதையை போல நடந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம்

சினிமா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமண புகைப்படங்களை நேற்று மாலை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டனர். புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. இருவரது தோற்றமும் ராமர்-சீதாவை நினைவுப்படுத்துகிறது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா வடிவமைத்திருந்தார். சிவப்பு நிற பார்டருடன் கோவில் மைய கருக்கள் சேலையின் விளிம்பில் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது.

இது ஐதராபாத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களின் ஆன்மிகத்தை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் பழங்கால தங்கத்தை பயன்படுத்தி ஒரு அற்புதமான கலை திறனோடு பக்தி மணத்துடன் ராஷ்மிகா ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. விஜய் தேவரகொண்டா வேட்டி சிண்டூர் அங்க வஸ்திரத்துடன் கோவில்களின் கலைத்திறனுடன் எம்பிராய்டரி செய்யப்பட்டு புனித கட்டிட கலையின் சின்னங்கள் ஆடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமண ஜோடிகளின் ஆடை அணிகலன்கள் விருந்தினர்கள் மட்டுமல்ல பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர். விதவிதமான சைவ, அசைவ பிரமாண்ட விருந்துடன் நடைபெறும் திருமண வரவேற்பு விழாவை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.
 

Leave a Reply