• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்

இலங்கை

மஸ்கெலிய கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக தோட்டக்கம்பனியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துரையாடியிருந்த நிலையில் இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

மஸ்கெலிய கவரவில பெருந்தோட்டத்தில் தொழிலாளர்கள் 8 பேர் கடந்த டிசம்பர் மாதம் முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தோட்டதொழிலாளர்கள் போராட்டத்தினையும் முன்னெடுத்துள்ளனர்.

மஸ்கெலிய கவரவில பெருந்தோட்டத்தில் தொழிலாளர்கள் 8 பேர் கடந்த டிசம்பர் மாதம் முதல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த நடவடிக்கைக்கு தீர்வு காணும் வகையில் தோட்டக் கம்பனி முகாமைத்துவ பிரிவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர்.

ஹட்டன் பொலிஸாரின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் தோட்ட கம்பனியினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.
 

Leave a Reply