மீண்டும் நடிக்க வரும் பூஜா
சினிமா
'உள்ளம் கேட்குமே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா. 'அட்டகாசம்', 'ஜே.ஜே.', 'நான் கடவுள்', 'ஓரம்போ' என பல படங்களில் நடித்த பூஜா, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாள படங்களிலும் கலக்கினார்.
இலங்கையை சேர்ந்தவரான பூஜா, 2016-ம் ஆண்டு தொழில் அதிபர் பிரசான் டேவிட் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய பூஜா, கணவரின் தொழிலையும் சேர்த்து கவனித்துக்கொண்டு வந்தார். அவ்வப்போது இலங்கை படங்களில் தலைகாட்டி வந்தார்.
இதற்கிடையில் பூஜா தமிழ் சினிமாவுக்கு வருகிறார் என்று கூறப்படுகிறது. 2 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். கதையும் நடிகைக்கு பிடித்துப்போனதால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜா மீண்டும் சினிமாவுக்கு திரும்ப இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 44 வயதிலும் அவரது அழகு குறையவில்லை என பாராட்டு தெரிவித்தும் வருகிறார்கள்.






















