She is Coming - கல்யாணி பிரியதர்ஷன் நடித்த Lokah டீசர் ரிலீஸ்
சினிமா
மலையாள சினிமாவில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ ஜானரில் லோகா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கல்யாணி இதுவரை நாம் பார்த்திராத கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இப்படம் பல பாகங்களில் ஒரு சினிமாடிக் யூவினர்சில் உருவாக இருக்கிறது.
இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஓணத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. படத்தின் விஷ்வல்கள் மிக அட்டகாசமாக அமைந்துள்ளது. நிலவுக்கும் கல்யாணி பிரியதர்ஷனுக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்குபடி காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் சூப்பர் பவர்ஸ் உள்ள ஒரு கதாப்பாத்திரத்தில் கல்யாணி நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தற்போது மக்களிடம் அதிகரித்துள்ளது.






















