• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் GovPay திட்டம்

இலங்கை

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் Government Digital Payment Platform (GovPay) ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஆயிரம் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டத்தை மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 

Leave a Reply