கனடாவின் TD வங்கி இவ்விலையுதிர் காலத்தில் இருந்து அலுவலகத்தில் பணிபுரியும் முறையை
கனடா
கனடாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான TD வங்கி, இவ்விலையுதிர் காலத்தில் இருந்து அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் முறையை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் படி, வாரத்தில் நான்கு நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
மூத்த நிலை ஊழியர்கள் (AVP மற்றும் அதற்கு மேல்) அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நேரில் பணிக்கு திரும்புவார்கள். மற்ற அனைத்து ஊழியர்களும் தேவையான வசதிகள் அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்தால் நவம்பர் 3 ஆம் தேதியில் இருந்து பணிக்குத் திரும்புவார்கள்.
இந்த மாற்றம் பற்றி TD வங்கியின் மனிதவளத் தலைவர் மெலனி பர்ன்ஸ் கூறும்போது, "நேரில் பணிபுரிவது ஒத்துழைப்பு, முடிவெடுப்பு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சியை மேம்படுத்தும்," என்றார்.
RBC, BMO, மற்றும் Scotiabank ஆகியவைகளுக்குப் பிறகு, தொலைதூர பணியிட நெகிழ்வுத்தன்மையை குறைத்து, கலப்பு வேலை முறை நோக்கி நகரும்ஐந்து பெரிய வங்கிகளில் TD வங்கியும் சேர்கிறது. மேலாளர்கள் சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்றாலும், அலுவலகத்தின் முக்கியத்துவம் இப்போது மீண்டும் வலுப்பெறும் நிலையை நோக்கி செல்கிறது.























