• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 சந்தேகநபர்கள் கைது

இலங்கை

தென்னிலங்கையில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தின் மஹமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவருக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் சில சாரதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply