பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு
சினிமா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் மற்றும் நடிகராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதீப் ரங்கநாதனுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் கிருத்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கீர்த்தீஸ்வர்ன் இயக்கும் ட்யூட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. படக்குழு பிரதீப் ரங்கநாதனை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
























