நான் ஸ்கூலை கட் அடித்து பார்த்த முதல் தமிழ் திரைப்படம் பாட்ஷா - ஃபகத் ஃபாசில்
சினிமா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நாளை வெளியாகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஃபஹத் ஃபாசில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " நான் முதன்முதலில் தியேட்டரில் தமிழில் பார்த்த திரைப்படம் பாட்ஷா. என் நண்பர்களுடன் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சென்று பார்த்த திரைப்படம் அது. என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, உண்மைய சொன்னேன் போன்ற வசனங்களை மெய் மறந்து ரசித்தேன்" என கூறியுள்ளார்.






















