நான் கமல் ரசிகர் என கூறியதற்கு ரஜினி சாரின் பதில் - லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் கூலி பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவரமாக நடைப்பெற்று வரும் நிலையில்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் " நான் முதன் முதலில் ரஜினி சாரிடம் கூலி திரைப்படத்தின் கதை சொல்லும் போது, நான் கமல் சாருடைய ரசிகர் என சொல்லிதான் கதையை சொன்னேன். அப்போது அவர் எதும் கூறாமல் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டார். கூலி திரைப்படம் டப்பிங் பணிகள் முடிந்த பிறகு என்னுடைய உதவி இயக்குநரிடம் லோகேஷ் என்னிடம் கதை சொல்லும் போது அவர் நான் கமல் ரசிகர் என கூறினார் அவரை நான் இசை வெளியீட்டு விழாவில் பார்த்துக்குறேன்" என மிகவும் நகைச்சுவையாக கூறி சென்றார் .























