நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்
இலங்கை
நாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேற்கு வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.





















