ஹர்ஷ இலுக்பிட்டிவின் தண்டனை தீர்ப்பு ஒத்திவைப்பு
இலங்கை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தண்டனைத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தீர்ப்பு இன்று (24) அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இலத்திரனியல் வீசா தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சுமார் ஒரு வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















