• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.

இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும்.

ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு இருந்ததில்லை.

ஜப்பான் அமெரிக்காவிற்கு 15 சதவீத பரஸ்பர வரிகளை செலுத்தும். இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம். ஜப்பானுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் பிலிப்பைன்ஸ் நாடுடனும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply