• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் சமீபத்திய பட்டியலில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது கடந்த ஆறு மாதங்களில் எந்த நாடும் கண்டிராத மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனை தளமாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, ஒரு நாட்டின் பாஸ்போர்ட் அதன் குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் தரவரிசைப்படுத்துகிறது.

தற்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணிக்க முடியும்.

இந்தியர்கள், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உடன், விசா இல்லாமல் 189 நாடுகளுக்குள் நுழையலாம்.

இந்த முறை முன்னணியில் இருந்த அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன. 
 

Leave a Reply