• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சிக்கல்

அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். எனினும் அங்கு  வீடுகள் எளிதில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் அங்கு வீட்டு வாடகை அதிகமாக அறவிடப்படுவதால்  பலரும் வாகனங்களிலேயே வீடு போன்ற வசதியை உருவாக்கி அதில் குடியேறி வருகின்றனர்.

இந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டு நடமாடும் வீடு போல செயல்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம் இந்த நடமாடும் வீடுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது போன்ற வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நடைபாதைகளை சுத்தமாக வைத்திருக்க சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே இதுபோன்ற நடமாடும் வீடுகளில் மக்கள் வசிக்க தடை விதிக்கவும், வாகன நிறுத்த விதிமுறைகளை அமுல்படுத்தவும் உள்ளூர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply