வத்தை பகுதியில் வீடு தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
இலங்கை
நாரஹேன்பிட்டி, 397 வத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சம்பவத்தில் உயிரிழந்தவர் ஒரு வாடகைதாரர் என்றும், தீ விபத்தை அடுத்த பலத்த தீக்காயங்களுடன் அவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.






















