இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை
இலங்கை
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து வரும் சந்திரலிங்கம் என்ற நபர் குறித்த பெண்ணை பாலடைந்த வீட்டுக்குள் வைத்து குறித்த கொலை செய்து வீட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
இதேவேளை அம்பாறையிலும் இன்று அதிகாலை பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த 22 வயதான சரோஜா உதயங்கனி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அந்த இளைஞனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், அவரது தாய் மற்றும் தந்தை மீதும் தாக்குதல் நடாத்தி வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை மொனராகலை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இச் சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.























