கருப்பன் வரான் வழி மறிக்காதே - சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு
சினிமா
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
டீசர் நாளை வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் ஒரு கருப்பு கண்ணாடி மற்றும் நெருப்பில் குதிரை ஓடுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.






















