• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் – ரோஹித அபேகுணவர்தனவின் மகள் தொடர்பில் தீவிர விசாரணை

இலங்கை

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றபோது ரோஹித அபேகுணவர்தனவின் மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோத பாகங்கள் பொருத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் ஒன்று குறித்து கடந்த 19ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன், ரசிக விதான மதுகம நகரில் பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதான விடம் இடம்பெற்ற விசாரணையில் குறித்த ஜீப் வாகனம் ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து வாங்கப்பட்டது என தெரிய வந்துள்ள நிலையிலேயே பொலிஸார் அவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்கு பொலிஸார் சென்ற வேளையில் அவர் தலைமறைவாகியிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
 

Leave a Reply