10 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
இலங்கை
பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்த முயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 50 அட்டைப் பெட்டிளில் மொத்தம் 10 ஆயிரம் வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் (PNB) அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று (21) காலை மேற்கொண்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















